×

மாடலிங் பெண்ணுக்கு சரியாக முடி வெட்டாததால் கடைக்காரருக்கு கோடி கணக்கில் அபராதம்.! தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் தீர்ப்பு

டெல்லி: மாடலிங் செய்யவுள்ள பெண்ணுக்கு தவறான முடி திருத்தம் செய்ததால், அவருக்கு இழப்பீடாக 2 கோடி கொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. புதுடெல்லியில் உள்ள பெண் ஒருவர் கடந்த 2018 ஆம் ஆண்டு மாடல் தேர்வுக்காக முடி திருத்தம் செய்வதற்கு டெல்லியில் உள்ள ஹோட்டலில் உள்ள சொகுசு அழகு நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு தனது நீண்ட கூந்தலில் இருந்து நான்கு அங்குலம் அளவுக்கு மட்டும் முடி வெட்ட கூறியுள்ளார். ஆனால் தனது மொத்த முடியின் நீளமே 4 அங்குலம் உள்ளது போல அதிக அளவில் முடி திருத்துபவர் வெட்டி உள்ளார்.

இதனை அடுத்து சம்மந்தப்பட்ட கடை நிர்வாகத்தினரிடம் அந்த பெண் புகார் தெரிவித்த நிலையில், தலை முடிக்கான சிகிச்சை இலவசமாக பெண்ணுக்கு கொடுக்கப்பட்டது. ஆனால் அதன் மூலமாக அந்தப் பெண்ணின் தலை முடி நிரந்தரமாக பாதிக்கப்பட்டதுடன், அரிப்பு மற்றும் முடி உதிர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சல் அடைந்த அந்த பெண் தனது மாடலாகவும் கனவு சிதைந்து விட்டதாகவும், தான் பார்த்து வந்த வேலை பறிபோய் விட்டது எனவும், சம்பந்தப்பட்ட முடி திருத்த கடை தனக்கு 3 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர் ஆர்.கே.அகர்வால் அவர்கள் தலைமையிலான அமர்வு, தற்போது இதற்கு தீர்ப்பளித்துள்ளது.

அதில், தனது முடியை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக சொகுசு ஹோட்டலில் உள்ள முடி திருத்த கடைக்கு அந்தப் பெண் அதிக அளவில் பணத்தை செலவிட்டு சென்றுள்ளார். ஆனால், அந்தப் பெண்ணின் நீண்ட கூந்தல் அதிக அளவில் வெட்டப் பட்டதுடன், முடியும் பாதிப்புக்குள்ளாகி உள்ளதால் அவர் மன உளைச்சலுக்கு உள்ளாகி, தனது பணியையும் அப்பெண் இழந்துள்ளார். எனவே தவறான முடி திருத்தம் செய்த காரணத்தால், இந்த கடை நிர்வாகம் அந்தப் பெண்ணுக்கு 2 கோடி இழப்பீடு தொகையை எட்டு வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Tags : National Consumer Complaints Commission , Shopkeeper fined crores for not cutting hair properly for modeling woman Judgment of the National Consumer Complaints Commission
× RELATED ஷாப்பிங் மால், கடைகளில் ‘கேரி...