ஹெராயின் கடத்தல் தொடர்பாக பிரதமர் மோடி, அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோர் அமைதி காப்பது ஏன் ? : ப.சிதம்பரம் கேள்வி

சென்னை : குஜராத் மாநிலத்தில் உள்ள அதானி துறைமுகத்தில் 3 டன் ஹெராயின் கடத்திய கும்பல் தான் கடந்த ஜூன் மாதம் 21 டன் ஹெராயின் போதைப் பொருளையும் கடத்தி இருக்கக் கூடும் என்று முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப. சிதம்பரம் சந்தேகத்தை கிளப்பியுள்ளார்.ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள ப.சிதம்பரம், குஜராத்தில் உள்ள முந்த்ரா எனப்படும் அதானியின் துறைமுகத்தில் கடந்த 15ம் தேதி 21,000 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் சிக்கியதை சுட்டிக் காட்டியுள்ளார். இந்த கடத்தலை 1 தனி நபர் செய்து இருக்க முடியாது என்று கூறியுள்ள ப.சிதம்பரம் அரசியலில் உள்ள உயர் அதிகாரிகளின் உதவியோடு தான் இந்த கடத்தல் நடந்திருக்க வாய்ப்பு உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த கடத்தல் தொடர்பாக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் அமைதி காப்பது ஏன் என்றும் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.இதனிடையே இதே துறைமுகத்தில் கடந்த ஜூன் மாதத்தில் 21 டன் எடையுள்ள ஹெராயின் போதைப் பொருள் கடத்தப்பட்டு லாரிகள் மூலமாக டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த போதைப் பொருளின் மதிப்பு 70,000 கோடி ரூபாயாகும்.

இந்த கடத்தலையும் ஒரே கும்பல் தான் செய்து இருக்க வாய்ப்பு என்று ப.சிதம்பரம் சந்தேகம் கிளப்பி உள்ளார்.இதனிடையே குஜராத்தில் இருந்து 21 டன் ஹெராயினை கடத்திக் கொண்டு சென்ற லாரிகள் எங்கே என்று கேள்வி எழுந்துள்ளது. ஆப்கானிஸ்தானின் கந்தகாரில் உற்பத்தி ஆன ஹெராயின் ஈரானின் பந்தர் அப்பாஸ் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து குஜராத்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.குஜராத் முதல் டெல்லி வரை 1,176 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த லாரி எந்த சுங்கச் சாவடியிலும் சிக்காமல் சென்றது எப்படி என்றும் கேள்வி எழுந்துள்ளது. 

Related Stories: