நெல்லையில் மதுவிலக்கு போலீசார் அதிரடி ரூ.13 லட்சம் மதுபாட்டில்கள் அழிப்பு

நெல்லை : நெல்லை மாநகரத்தில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.13 லட்சம் மதிப்பிலான மொத்தம் 7,635 மதுபாட்டில்கள் அதிகாரிகள் முன்னிலையில்  அழிக்கப்பட்டன. நெல்லை மாநகர பகுதியில் கடந்த 10 மாதங்களில் சட்டவிரோதமாக விற்பனை செய்ய முயன்ற மதுபாட்டில்கள் தொடர்பாக ஆயிரத்து 54 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு,  525 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் ரூ.13 லட்சம் மதிப்பிலான மொத்தம் 7,635 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தாமரை கண்ணன் உத்தரவின் பேரில் மதுவிலக்கு எஸ்பி மகேஷ்வரன் வழிகாட்டுதலின் பேரில், மதுபாட்டில்களை அழிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனையடுத்து பாளை பெருமாள்புரம் மகிழ்ச்சிநகரில் நேற்று கோட்ட கலால் அலுவலர் தாஸ்பிரியன், நெல்லை மாநகர மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, எஸ்ஐ கருப்பசாமி ஆகியோர் முன்னிலையில் மொத்தம் 7,635 மதுபாட்டில்கள், ரோடு ரோலர் வாகனத்தை பயன்படுத்தி அழிக்கப்பட்டன.

Related Stories:

More
>