உ.பி. துறவி நரேந்திர கிரி மரணம் தொடர்பான விசாரணையை தொடங்கியது சி.பி.ஐ..!!

லக்னோ: உ.பி. துறவி நரேந்திர கிரி மரணம் தொடர்பான விசாரணையை சி.பி.ஐ. தொடங்கியது. பிரயாக்ராஜில் உள்ள பாகம்புரி மடத்தில் தனது அறையில் சடலமாக தொங்கியதில் மர்மம் நீடிப்பதால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முக்கிய சீடர்களில் ஒருவரான ஆனந்த் கிரி மற்றும் சீடர்கள் சந்தீப் திவாரி, அதயா திவாரி ஆகிய 3 பேரை போலீசார் ஏற்கனவே கைது செய்தனர். ஆனந்த் கிரியின் நடவடிக்கைகளில் நரேந்திர கிரி அதிருப்தியில் இருந்ததாகவும், இந்த கொலையில் ஆனந்த்-திற்கு தொடர்பு இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

Related Stories:

More