×

இலங்கையில் அமைதி நீடிக்க தமிழ் அமைப்புகளுடன் நல்லிணக்கம் அவசியம்: ஐநா.வில் அதிபர் கோத்தபய பேச்சு

ஐ.நா: ‘இலங்கையில் அமைதி நீடித்து நிலவுவதற்கு  தமிழ் அமைப்புகளுடன்  நல்லிணக்கம் அவசியம் ேதவை. இதற்காக சர்வதேச நாடுகளின் ஆதரவை பெறுவதற்கும் தயாராக இருக்கிறோம்,’ என்று ஐநா.வில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்சே தெரிவித்தார். நியூயார்க்கில் நடந்து வரும் ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே நேற்று முன்தினம் பேசியதாவது: இலங்கை கடந்த 2009 வரை 30 ஆண்டுகளாக உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டது. 2019ம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் 250 பேர் கொல்லப்பட்டனர்.

அதற்கு முன ஈழப் போராளிகளின் மோதலை சந்தித்தோம். உலகளாவிய சவாலாக தீவிரவாதம் இருக்கிறது. இதை ஒடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. இன, மதங்களை  கடந்து அனைத்து இலங்கை மக்களுக்கும் வளமான, நிலையான மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்குவது எனது அரசின் நோக்கம். இந்த இலக்கை அடைய உள்நாட்டு அமைப்புகள், தமிழ் அமைப்புகள், ஐநா சபையின் நல்லிணக்கம் பெற இலங்கை அரசு தயாராக இருக்கிறது என்றார்.

Tags : Sri Lanka ,President ,Gotabhaya , To prolong peace in Sri Lanka With Tamil organizations Reconciliation is essential: President Gotabhaya's speech at the UN
× RELATED நிவாரணப் பொருட்களை வழங்கி உதவிய...