×

50 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து கண்காணித்து தாக்கும் 2,100 கோடி செலவில் 30 வேட்டை டிரோன்கள்: அமெரிக்காவிடம் வாங்க மோடி முடிவு

புதுடெல்லி: இந்தியாவின் பாதுகாப்பை பலப்படுத்தவும் ராணுவ திறனை மேம்படுத்தவும் அமெரிக்காவிடம் இருந்து ரூ.2,100 கோடி செலவில் 30 ‘பிரிடேட்டர்’ ரக டிரோன்களை வாங்க பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.எல்லையை சுற்றியுள்ள சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளின் அச்சுறுத்தல் சமீப காலமாக அதிகமாகி இருக்கிறது. இதனால், ராணுவத்தை பலப்படுத்துவதற்காக ஒன்றிய அரசு, தளவாடங்களை வாங்கி குவித்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, இந்திய ராணுவத்துக்கு அமெரிக்காவின் அதிநவீன ‘பிரிடேட்டர்’ ரகத்தை சேர்ந்த 30 டிரோன்களை வாங்க திட்டமிட்டு இருக்கிறார். இதன் விலை ரூ.2,100 கோடி. இது தொடர்பாக, அமெரிக்காவின் அணுசக்தி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி விவேக் லாலை சந்தித்து பேச இருக்கிறார்.

* அமெரிக்க விமானப்படையால் ‘எம்க்யூ-9 ரீப்பர்’ என்று பெயரிடப்பட்ட, ‘பிரிடேட்டர் பி’ என்பது நீண்ட தூரம் பறக்கும் அதிநவீன டிரோன்.
* இது, அதிக உயரத்தில் இருந்து உளவு பார்ப்பது மட்டுமின்றி, தகுந்த நேரத்தில் தாக்குதல் நடத்தும் திறனும் படைத்தது. அதற்கான ஆயுதங்கள் அதில் இடம் பெற்றிருக்கும்.
* இதன் காரணமாகவே, இந்த டிரோன்களை ‘வேட்டைக்காரன்’ என்றும் அழைக்கப்படுகின்றன.
* இந்த டிரோன்கள் 712 கிலோ வாட் குதிரை திறன், டர்போ இன்ஜினை கொண்டது.
* அதிகபட்சமாக 50 ஆயிரம் அடி உயரத்தில் 27 மணி நேரம் நிலைத்து பறந்து, எதிரிகளின் இலக் கை துல்லியமாக தாக்கும்.  

2017ம் ஆண்டே திட்டம்
கடந்த 2017ம் ஆண்டு மோடி அமெரிக்கா சென்றபோது, இந்த பிரிேடட்டர் டிரோன்களை வாங்க அன்றைய அதிபர் டிரம்ப்புடன் ஒப்பந்தம் போட திட்டமிடப்பட்டது. ஆனால், அப்போது இந்திய ராணுவம் ‘அவெஞ்சர்’ ரக டிரோன்களை வாங்குவதில் ஆர்வம் காட்டியதால், இந்த ஒப்பந்தம் நிறைவேறவில்லை.

Tags : Modi ,US , At a cost of Rs 2,100 crore to monitor and attack from an altitude of 50 thousand feet 30 hunting drones: Modi decides to buy from US
× RELATED “இவர்களின் அமைதி ஆபத்தானது”: பிரதமர்...