ஆஸ்ட்ரவா ஓபன் டென்னிஸ்...காலிறுதியில் எலனா ரிபாகினா

ஆஸ்ட்ரவா: செக் குடியரசில் நடைபெறும் ஆஸ்ட்ரவா ஓபன் மகளிர்  டென்னிஸ் தொடரில் கஜகிஸ்தான வீராங்கனை எலனா ரிபாகினா காலிறுதிக்கு தகுதி  பெற்றார்.காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நேற்று  கஜகிஸ்தான் வீராங்கனை  எலனா ரிபாகினா(22வயது, 16வது ரேங்க்),  போலந்து வீராங்கனை மேக்டா லினெட்(29வயது, 59வது ரேங்க்) ஆகியோர் மோதினர். அதில் முதல் சுற்றை  எலனா 6-3 என்ற புள்ளி கணக்கிலும், 2வது செட்டை மேக்டா 6-2 என்ற புள்ளி கணக்கிலும் எளிதில் கைப்பற்றினர். யாருக்கு வெற்றி என்பதை முடிவு செய்யும்  3செட்டில் அதிகம் எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனாலும் அதையும் அதிகம் அலட்டிக் கொள்ளாமல் எலனா 6-1 என்ற புள்ளி கணக்கில் சீக்கிரத்தில் வசப்படுத்தினார்.  அதனால் ஒரு மணி 37நிமிடங்கள் நடந்த ஆட்டத்தை 2-1 என்ற செட்களில் வென்ற எலனா காலிறுதிக்கு முன்னேறினார்.மரியா சக்கரி (சீரிஸ்), இகா ஸ்வய்டெக் (போலந்து), அனெ்ட் கொன்டவைட்(எஸ்டோனியா), பெட்ரோ கிவிதோவா(செக் குடியரசு) ஆகியோர் ஏற்கனவே காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

Related Stories:

More