×

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் ஆயிரக்கணக்கானோர் வேட்புமனு தாக்கல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் உள்ள 2321 பதவிகளுக்கு, நேற்று முன்தினம் வரை மொத்தம் 8603 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் கிராம வார்டு உறுப்பினர், ஊராட்சி மன்றத் தலைவர், ஒன்றியக்குழு உறுப்பினர், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் என மொத்தம் 2321 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் முடிந்தது. இதுகுறித்த விவரம்.

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் காட்டாங்கொளத்தூர், மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம், திருப்போரூர், திருக்கழுக்குன்றம், லத்தூர், சித்தாமூர், புனித தோமையர்மலை ஆகிய ஒன்றியங்களில் காலியாக உள்ள பதவிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதில், மொத்தமுள்ள 3,208 பதவிகளுக்கு இதுவரை 13,002 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதனால் கடைசி நாளான நேற்று முன்தினம் அரசியல் கட்சி சார்பில் போட்டியிடுபவர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதன் விவரம்.

புகார் எண் அறிவிப்பு
காஞ்சிபுரம் மாவட்ட தேர்தல் பார்வையாளராக அமுதவள்ளி நியமனம் செய்யப்பட்டுள்ளார். எனவே, உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, பொதுமக்கள் தங்களது புகார்களை மாவட்ட தேர்தல் பார்வையாளரை 93631 26471 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். செங்கல்பட்டு மாவட்டத்தில், தேர்தல் பார்வையாளராக, பிற்படுத்தப்பட்டோர் நலம் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சிறப்பு செயலாளர் வி.சம்பத் நியமிக்கப்பட்டுள்ளார். புகார்கள் குறித்து 044-79545231, 90039 12208 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.



Tags : Kanchipuram ,Chengalpattu , Local elections in Kanchipuram and Chengalpattu districts Thousands file nominations
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...