ஸ்ரீகிருஷ்ணா கலை கல்லூரியில் கொரோனா தடுப்பூசி முகாம்

காஞ்சிபுரம்: ஸ்ரீகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில், கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.காஞ்சிபுரம் அடுத்த கீழம்பி, காஞ்சி ஸ்ரீகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் திருப்புட்குழி அரசு ஆரம்ப சுகாதார நிலையம்   சார்பில் கல்லூரிவளாகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது. கல்லூரி  நிறுவனர் போஸ் தலைமை தாங்கினார்.

காஞ்சி கிருஷ்ணா கல்வி அறக்கட்டளை தாளாளர் அரங்கநாதன், தலைவர் வீரராகவன், செயலாளர் மோகனரங்கம், பொருளாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,  கல்லூரி முதல்வர் வெங்கடேசன் வரவேற்றார். முகாமில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாத பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், பஸ் டிரைவர்கள், 18 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்து, தடுப்பூசி போடப்பட்டது. முகாம் ஏற்பாடுகளை கல்லூரி  துணை முதல்வர் பிரகாஷ், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் காஞ்சனா, பேபி செய்தனர்.

Related Stories:

More
>