மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய ஆலோசனை கூட்டம்

பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகா, மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நேற்றுமுன்தினம் மாலை நடைபெற்றது.  இந்த கூட்டம் மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு செயல் தலைவர் நிலவழகன் தலைமை தாங்கினார்.  இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்,  2021 - 2022ம் ஆண்டிற்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு  பணிகள் செய்ய ஒதுக்கீடு செய்வதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. ஒரே ஊராட்சி பணிகளை அரசியல் பிரமுகர்களின் பெயரில் பணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, மீஞ்சூர் ஊராட்சியில் சுமார் 1.48 கோடி மதிப்பீட்டில் பணம் வாங்கிக்கொண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஏராளமான ஊராட்சியில், ஒரு வேலை கூட செய்ய நிதி ஒதுக்கீடு செய்யாமல் முறைகேடு நடந்துள்ளது.  ஒன்றிய பொறியாளர் பணம் வாங்கிக்கொண்டு சிபாரிசு பெயரில் அரசியல்வாதிகளின் ஆதரவோடு பணிகள் முறைகேடு நடந்துள்ளது.  அதில் ஈடுபட்ட நபர்கள் மீது மாவட்ட கலெக்டர் மற்றும் திட்ட இயக்குனர் முறைப்படி சந்தித்து மனு அளித்து தேர்வு செய்த பணிகளை மறுபடியும் எவ்வித முறைகேடும் இல்லாமல் அனைத்து ஊராட்சிகளுக்கும் சமமாக பிரித்துக் கொடுக்க வேண்டும் எனவும். இதற்கு சரியான  தீர்வு கிடைக்கவில்லை என்றால் மீஞ்சூர் ஒன்றிய அலுவலகத்தில் வரும் 28ம் தேதி அறவழியில் ஆர்ப்பாட்டம் செய்யப்படும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  இந்த கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் பாலன் சங்க நிர்வாகிகள் ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

More
>