சமூக நீதி - மனித உரிமை விழிப்புணர்வு கூட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட  எஸ்பி வருண்குமார் அறிவுறுத்தலின்படி, கடம்பத்தூர் ஒன்றியம், கீழச்சேரி ஊராட்சி மன்ற அலுவலக வளாத்தில் சமூகநீதி மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு கூட்டம் ஊராட்சி தலைவர் தேவிகலா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருவள்ளூர் டிஎஸ்பி சந்திரதாசன், மாவட்ட சமூக நல மனித உரிமைகள் டிஎஸ்பி லோகநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இதில் டிஎஸ்பி சந்திரதாசன் பேசுகையில், ‘’பொதுமக்களாகிய நாம் குழந்தைகளுக்கு நல்லமுறையில் கல்வி கற்கவும் நல்ல பழக்க வழக்கங்கள் கடைபிடிக்கவும் அறிவுறுத்தினால்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும். நாம் எடுத்த காரியத்தில் சாதிக்க வேண்டுமென்ற தன்னம்பிக்கையோடு வாழ்ந்தால் மட்டும் வாழக்கையில் வெற்றிப்பெற முடியும். தாங்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து எங்களிடம் நேரில் புகார் அளிக்கலாம். அல்லது 6379904848 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம்’ என்றார்.

Related Stories:

More
>