வேலூரில் குடும்ப தகராறில் 3 குழந்தைகளை கழுத்து நெரித்து கொன்று தாய் தற்கொலை

வேலூர்: வேலூர் சலவன்பேட்டை கச்சேரி தெருவை சேர்ந்தவர் தினேஷ்(30). டைல்ஸ் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜீவிதா (23). அக்‌ஷயா (ஐந்தரை வயது), நந்தகுமார்(4), ஆறு மாத ஆண் குழந்தை என 3 பிள்ளைகள் இருந்தனர். குடிபோதைக்கு அடிமையான தினேஷ், கடந்த வாரம் போதையில் ஜீவிதாவுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் கோபித்துக்கொண்டு ஜீவிதா தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். பெற்றோரின் அறிவுரை ஏற்று நேற்று காலை தினேஷ் வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது, மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு அவர் கோபத்துடன் வெளியே சென்றுள்ளார். இதில் மனமுடைந்த ஜீவிதா 3 குழந்தைகளையும் புடவையால் கழுத்தை நெரித்து ெகாலை செய்து விட்டு, தானும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து வேலூர் தெற்கு போலீசார் வழக்கு பதிந்து தினேஷை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

More
>