சென்னை விமான நிலையத்தில் உள்ளாடைகளில் மறைத்து தங்கம், எலக்ட்ரானிக் பொருட்கள் கடத்தல்: பெண் உள்பட 2 பேர் கைது

மீனம்பாக்கம்: சென்னை விமான நிலையத்தில் உள்ளாடைக்குள் மறைத்து தங்கம், எலக்ட்ரானிக் பொருட்கள் கடத்திவந்த பெண் உள்பட 2 பேரை அதிகாரிகள் கைது செய்தனர். சென்னை பன்னாட்டு விமான நிலையத்துக்கு இன்று அதிகாலை வந்த பிளை துபாய் ஏர்லைன்ஸ் பயணிகளை சுங்கத்துறையினர் சோதனை நடத்தி அனுப்பிவைத்தனர். திருச்சியை சேர்ந்த ஒரு பெண் பயணி மீது சந்தேகம் ஏற்பட்டதால் அவரது உடமைகளை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது எதுவும் இல்லை. இதையடுத்து அந்த பெண்ணை விமான நிலையத்தில் அறைக்கு அழைத்துச்சென்று பெண் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவரது உள்ளாடைகளுக்குள் தங்க வளையல்கள் மறைத்துவைத்திருந்தார்.

அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 307 கிராமம் தங்கத்தின் மதிப்பு ரூ.13 லட்சம். இதையடுத்து அந்த பெண்ணை கைது செய்தனர். இன்று அதிகாலை சார்ஜாவில் இருந்து ஏர்அரேபியா ஏர்லைன்ஸ் விமானம் சென்னை சர்வதேச விமானநிலையம் வந்தது. இதில் வந்த பயணிகளிடம் சோதனை நடத்தியபோது சிவகங்கையை சேர்ந்த ஆண் பயணி, ஆடைக்குள் மறைத்து வைத்திருந்த 357 கிராம் தங்கம் மற்றும் சூட்கேசில் மறைத்துவைத்திருந்த எலக்ட்ரானிக் பொருட்கள், வெளிநாட்டு சிகரெட்டுகளை களை பறிமுதல் செய்தனர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.16 லட்சம். பயணியை கைது செய்தனர்.

Related Stories:

>