×

கோடநாடு கொலை வழக்கு விஸ்வரூபம்: சந்தோஷ்சாமி, மனோஜ்சாமியிடம் தனிப்படை 17 மணி நேரமாக விசாரணை..!!

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சந்தோஷ்சாமி, மனோஜ்சாமியிடம் தனிப்படை 17 மணி நேரமாக விசாரணை நடத்துகின்றனர். 2வது நாளாக இன்று இரண்டு பேரிடமும் 7 மணி நேரமாக விசாரணை நடைபெற்று வருகிறது. கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வலதுகரமான சேலம் இளங்கோவனை விசாரணைக்கு அழைக்க போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த வழக்கில் விவகாரத்தில் மறு விசாரணை படுமும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. கோடநாடு வழக்கில் பல மர்மங்கள் இருக்கும் நிலையில் அதில் ஏற்பட்ட மரணங்கள் தொடர்பாக தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது.

இதனால் இவ்வழக்கின் ஒவ்வொரு நகர்வும் பெரும் எதிர்பார்ப்புக்குரியதாக இருக்கிறது. கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் யார் யாருக்கு எல்லாம் தொடர்பிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறதோ அத்தனை பேரையுமே விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து போலீஸ் விசாரித்து வருகிறது.

மேலும், இந்த வழக்கில் சந்தோஷ்சாமி, மனோஜ்சாமியிடம் தனிப்படை 17 மணி நேரமாக விசாரணை நடத்துகின்றனர். 2வது நாளாக இன்று இரண்டு பேரிடமும் 7 மணி நேரமாக விசாரணை நடைபெற்று வருகிறது. உதகையில் உள்ள பழைய எஸ்.பி அலுவலகத்தில் நேற்று இருவரிடமும் 10 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

கோடநாடு வழக்கில் சந்தோஷ்சாமி, மனோஜ்சாமி ஆகியோர் முறையே 8 மற்றும் 9வது குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். ஏ.டி.எஸ்.பி கிருஷ்ணமூர்த்தி, டி.எஸ்.பி.க்கள் சந்திரசேகர், சுரேஷ் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். 5வது குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள சதீசன், 6வதாக சேர்க்கப்பட்டுள்ள பிஜின் குட்டியிடமும் தனிப்படை விசாரணை நடத்துகின்றனர். கொள்ளையடிக்க தூண்டியது யார், கொள்ளையடித்த ஆவணங்கள், பொருட்கள் குறித்தும் போலீஸ் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வலதுகரமான சேலம் இளங்கோவனை விசாரணைக்கு அழைக்க போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Tags : Kodanadu ,Viswaroopam ,Santoshsamy ,Manojsamy , Kodanad, murder case, investigation
× RELATED கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில்...