நீட் தேர்வுக்கு எதிரான தமிழக அரசின் சட்டபோராட்டம் தொடரும் : அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

கோவை : ‘‘நீட் தேர்வுக்கு எதிரான தமிழக அரசின் சட்ட போராட்டம் தொடரும்,’’ என கோவையில் அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.இந்திய தொழில்கள் கூட்டமைப்பு, தனியார் பள்ளிகள் தாளாளர், நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் கோவையில் இன்று நடந்தது‌. இந்த நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்றார்.

இதைத்தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ்  கூறியதாவது: ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளில் திறப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. ஒன்றாம் வகுப்பு முதல் பள்ளிகளை திறக்க தனியார் பள்ளிகள் கேட்டு வருகின்றனர். பெற்றோர் மத்தியில் தற்போது வரை கொரோனா அச்சம் இருப்பதால் பள்ளி திறப்பு பற்றி முடிவு செய்யவில்லை. கொரோனா பரவல் கட்டுக்குள் இருப்பதை பொறுத்தே பள்ளிகள் திறப்பு பற்றி முடிவு எடுக்கப்படும்.பள்ளிகளுக்கு மாணவர்களை வர கூறி கட்டாயப்படுத்த கூடாது. கொரோனா பாதிப்பு இருந்தால் பள்ளிகள் வெளியில் தெரியப்படுத்த வேண்டும்.

6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையான பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளோம். நவம்பர் முதல் கேரளாவில் பள்ளிகள் திறக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான தேர்வில் வயது வரம்பு உயர்த்த பரிசீலனை செய்து வருகிறோம். நீட் தேர்வு தொடர்பாக சட்ட போராட்டம் நடத்தப்படும். பள்ளிகளில் உளவியல் ஆசிரியர்கள் தேவை உள்ளது. அதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அன்பில் மகேஷ் கூறினார்.

Related Stories:

>