ஐபிஎல்2021: இன்றைய போட்டியில் மும்பை-கொல்கத்தா இன்று மோதல்.! மீண்டும் கேப்டனாக ரோகித்

அபுதாபி: ஐபிஎல் கிரிக்கெட்டில் அபுதாபியில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 34வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. மும்பை 8 போட்டியில் 4 வெற்றி, 4 தோல்வி என 8 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது. 2வது கட்ட சீசனில் தொடக்க ஆட்டத்தில் சென்னையிடம் தோல்வி அடைந்த நிலையில் வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டிய நெருக்கடியில் உள்ளது. கேப்டன் ரோகித் சர்மா, ஹர்த்திக் பாண்டியா, உடல் தகுதி பெறாததால் இன்றும் ஆடுவது சந்தேகம் தான். மறுபுறம் கொல்கத்தா 8 போட்டியில் 3 வெற்றி, 5 தோல்வி என 6 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது.

கடைசி போட்டியில் பெங்களூரை வீழ்த்திய உற்சாகத்தில் களம் காண்கிறது. சுழலில் வருண் சக்கரவர்த்தி, சுனில் நரேன் அசத்தி வருகின்றனர். பேட்டிங்கில் கில், ரானா, வெங்கடேஷ் ஐயர், தினேஷ்கார்த்திக், கேப்டன் ேமார்கன், ரஸ்சல் என அதிரடி பேட்டிங் வரிசை உள்ளது. இரு அணிகளும் இதுவரை 28 போட்டிகளில் நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் கொல்கத்தா 6, மும்பை 22 போட்டிகளில் வென்றுள்ளன. நடப்பு சீசனில் கடந்த ஏப்.13ம் தேதி மோதிய போட்டியில் மும்பை 10 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசியாக மோதிய 13 போட்டிகளில் 12ல் மும்பை வென்றுள்ளது.

Related Stories: