தடுப்பூசி போடலையோ தடுப்பூசி...!: புதுச்சேரி - ஆந்திரா எல்லையில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள கூவி, கூவி அழைக்கும் சுகாதாரப் பணியாளர்கள்..!!

புதுச்சேரி: புதுச்சேரி - ஆந்திரா எல்லையில் சுகாதாரப் பணியாளர்கள் வியாபாரம் செய்வது போல கூவி கூவி அழைத்து தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டுள்ளது பொதுமக்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது. புதுச்சேரி மற்றும் ஆந்திராவில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் ஒருபகுதியாக சுகாதாரப் பணியாளர்கள் வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தி வருகின்றனர்.

ஏனாம் ஆந்திர எல்லை கிராமங்களில் சுகாதார பணியாளர்கள் கையில் தடுப்பூசி வைத்துக்கொண்டு முதல் தவணை, இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு தெலுங்கு மொழியில் கூவி கூவி அழைத்து வருகின்றனர். 3 செவிலியர்களை கொண்ட அந்த குழு, தெருவில் வியாபாரம் செய்பவர்களை போல தடுப்பூசி செலுத்தும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. செவிலியர்களின் இந்த வித்யாசமான விழிப்புணர்வு முயற்சி அனைத்து தரப்பு மக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது.

Related Stories:

More
>