×

பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம்: நிபுணர் குழு அமைத்து விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் முடிவு..!!

டெல்லி: பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து நிபுணர் குழு அமைத்து விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது. இந்தியாவில் பத்திரிகையாளர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோரின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக கூறப்படும் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கடுமையான அமளியில் ஈடுபட்டன.

இந்த குற்றசாட்டு தொடர்பாக விளக்கமளித்துள்ள ஒன்றிய அரசு, தற்போது எழுந்துள்ள குற்றசாட்டு அரசின் நிறுவனங்களை களங்கப்படுத்தும் நோக்கில் சுமத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதேசமயம், பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரம் தொடர்பாக பத்திரிகையாளர்கள், அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் சார்பில் பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த வழக்கில் கூடுதல் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்யுங்கள் என 2 முறை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேட்டும் ஒன்றிய அரசு அதனை செய்யவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக  பெகாசஸ் ஒட்டுக்கேட்பு குறித்து நிபுணர் குழு அமைத்து விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது.  நிபுணர் குழு தொடர்பாக அடுத்த வாரம் விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என தலைமை நீதிபதி ரமணா தெரிவித்துள்ளார்.


Tags : Pegasus ,Supreme Court , Pegasus, Supreme Court
× RELATED கட்சி தாவினால் பதவியிழக்கும் வகையில்...