வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, தருமபுரி, மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தி.மலை மாவட்டங்களிலும் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மதுரை மேலூரில் 7, திருபுவனம், மதுரை புலிப்பட்டியில் தலா 6 செ.மீ மழை பதிவானது.

Related Stories:

>