இடஒதுக்கீடு நெறியை மீறும் ஸ்டேட் வங்கி - சு.வெங்கடேசன் கடிதம்

சென்னை: ஸ்டேட் வங்கி துவக்க நிலைத்தேர்வு முடிவுகளில் இடஒதுக்கீடு நெறிமுறைகள் தொடர்ந்து மீறப்படுகின்றன. 2020ல் இருந்து இடஒதுக்கீடு பிரச்சனை குறித்து நிதி அமைச்சகத்துக்கு கடிதம் எழுதி வருகிறேன் என்று சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். கடிதங்களை நிதி அமைச்சகம் ஸ்டேட் வங்கிக்கு அனுப்புவதும் இடஒதுக்கீடு பின்பற்றுவதாக பதில் தருவதும் வாடிக்கையாக உள்ளது. ஒவ்வொரு முறை தேர்வு முடிவுகள் வரும் போதும் பரபரப்பும் சர்ச்சையும் ஏற்படுவதுமாக உள்ளது. ஒன்றிய அரசும் ஸ்டேட் வங்கியும் மீறல்களை தொடர்வதாக சு.வெங்கடேசன் எம்.பி குற்றச்சாட்டு கூறியுள்ளார். தற்போதைய முடிவிலும் பொதுப்போட்டி, ஓ.பி.சி., எஸ்.சி பிரிவினருக்கு ஒரே கட் ஆப் 61.75 இருப்பது எப்படி என கேள்வி எழுப்பியுள்ளார். பொதுப்போட்டியில் தேர்வான இடஒதுக்கீட்டு பிரிவினரை இடஒதுக்கீட்டு கணக்கில் சேர்ப்பது அப்பட்டமான மீறல் என கூறியுள்ளார். பொதுப்பட்டியல் கட் ஆப்-க்கு அதிக மதிப்பெண் பெற்ற இடஒதுக்கீட்டு பிரிவினர் பொதுப்பட்டியலிலேயே கணக்கு வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

Related Stories:

More
>