×

மாநிலங்களவை உறுப்பினர் பதவி!: திமுக சார்பில் போட்டியிட்ட கனிமொழி சோமு, ராஜேஷ்குமார் ஆகியோர் போட்டியின்றி தேர்வாகின்றனர்..!!

சென்னை: தமிழகத்தில் காலியாக இருக்கக்கூடிய இரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு கனிமொழி சோமு, ராஜேஷ்குமார் போட்டியின்றி தேர்வாகின்றனர். திமுக சார்பில் போட்டியிட்ட கனிமொழி சோமு, ராஜேஷ்குமார் ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர்களாக போட்டியின்றி தேர்வாகிறார்கள். ராஜ்யசபா உறுப்பினர்களாக இருந்த அதிமுகவைச்சேர்ந்த கே.பி.முனுசாமி,  வைத்திலிங்கம் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏக்களாக தேர்வு பெற்றதால், மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளை  ராஜினாமா செய்தனர். இதனால்,  காலியான 2 இடங்களுக்கு தேர்தல் தேதியை அகில இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்தது.

அதன்படி தமிழகத்தில் 2 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த 15ம் தேதி தொடங்கி முதல் வேட்புமனுக்கள் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. நேற்றுடன் வேட்புமனுக்கான கால அவகாசம் முடிந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், கனிமொழி மற்றும் நாமக்கல் திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.ஆர்.என் ராஜேஷ்குமார் ஆகிய வேட்பாளர்களும், சுயேட்சையாக 3 வேட்பாளர்களும் இந்த 2 இடங்களுக்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
கே.பி.முனுசாமியின் காலியிடத்திற்கு தி.மு.க. வேட்பாளர் டாக்டர் கனிமொழி சோமு, சுயேச்சை வேட்பாளர்கள் பத்மராஜன், அக்னி ஸ்ரீராமச்சந்திரன், புஷ்பராஜ் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

தொடர்ந்து இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. தி.மு.க. கட்சி தவிர வேறு கட்சிகள் எதுவும் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. இந்நிலையில் சுயேட்சையாக போட்டியிட்ட மூவரின் வேட்புமனுக்கள் முன்மொழிவோர் இல்லாததால் நிராகரிக்கப்பட்டன. திமுக வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் மட்டுமே ஏற்கப்பட்டதால், கனிமொழி சோமு, ராஜேஷ்குமார் ஆகியோர் நிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியின்றி  தேர்வானதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


Tags : Kanimozhi Somu ,Rajesh Kumar ,DMK , Member of the State Council, Kanimozhi Somu, Rajeshkumar
× RELATED இந்தியா கூட்டணி வேட்பாளர்களை...