'குடிமகன்'களுக்கு ஹேப்பி நியூஸ்.. டாஸ்மாக் கடைகள் முன்பு விலைப்பட்டியல் வைக்க வேண்டும் : தமிழக அரசு அறிவிப்பு!!

சென்னை : மது வாங்குபவர்களுக்கு தெரியும் வகையில் டாஸ்மாக் கடைகள் முன் விலைப்பட்டியல் வைக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மதுபானங்களுக்கு அரசு ஒருவிலை நிர்ணயித்து இருந்தால் டாஸ்மாக்கில் அதை விட கூடுதலாக பணம் வசூலிக்கின்றனர். குறிப்பாக ஒரு குவார்ட்டர் பாட்டிலுக்கு மட்டும் 10 ரூபாய் கூடுதலாக வசூல் செய்கின்றனர். இதுபற்றி பலமுறை புகார்கள் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் டாஸ்மாக் நிர்வாகம் சில அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் இல.சுப்பிரமணியன் அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்கள்,. சிறப்பு பறக்கும் படை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில் மதுபானம் வாங்க வரும் வாடிக்கையாளர்கள் பார்வையில்படும்படி டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளுக்கு முன்பு விலைப்பட்டியல் வைக்க வேண்டும்.

வாடிக்கையாளர்கள் வாங்கிச் செல்லும் மதுபானங்களை உரிய ரசீது பில் புத்தகம் மூலம் கண்டிப்பாக வழங்க வேண்டும். டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளில் மதுபானங்களை மொத்தமாக விற்பனை செய்தல் கூடாது. மதுபானங்களை மொத்தமாக விற்பனை செய்யும் டாஸ்மாக் விற்பனையாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். டாஸ்மாக்கில் மொத்தமாக மதுவாங்குபவர்களை கண்காணித்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேற்கண்ட உத்தரவுகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா? என்று அடிக்கடி ஆய்வு நடத்த வேண்டும். விதிகளை மீறும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்,இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

More
>