உரிமைகள், சுயமரியாதைக்காக போராடி வரும் விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுடன் காங். துணை நிற்கும்!: ராகுல்காந்தி பேச்சு

டெல்லி: உரிமைகள் மற்றும் சுயமரியாதைக்காக போராடி வரும் விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுடன் காங்கிரஸ் துணை நிற்கும் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசு கடந்து ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி 3 வேளாண் சட்ட திருத்த மசோதாக்களை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. பின்னர் குடியரசு தலைவரின் ஒப்புதலுடன் சட்டமாக நிறைவேற்றப்பட்டது. புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி டெல்லி, ஹரியானா, பஞ்சாப் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 10 மாதங்களை எட்டவுள்ள நிலையில் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஒன்றிய அரசு தற்போது வரை செவிசாய்க்கவில்லை.

விவசாயிகளின் உரிமையை மத்திய பாஜக அரசு மறுத்து வருவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஒன்றிய மோடி அரசு அவர்களின் நண்பர்களுக்காகவே துணை நிற்பதாகவும் ஆனால் உரிமைகள் மற்றும் சுய மரியாதைக்காக சத்யாகிரக வழியில் போராடி வரும் விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுடன் காங்கிரஸ் துணை நிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவை நான் இந்தியாவுடன் நிற்பேன் என்ற ஹாஷ் டேக்குடன் ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார்.

Related Stories:

More
>