செங்கை செல்லப்பன் மறைவு: கே.எஸ்.அழகிரி இரங்கல்

சென்னை: தமிழ்நாடு காங்கிரசில் எஸ்சி துறையின் தலைவராக இருந்த செங்கை செல்லப்பா மறைவுக்கு, மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: இளமை பருவம் முதல் காங்கிரஸ் பேரியக்க தலைமை மீது பற்று கொண்டு கட்சி  வளர்ச்சிக்கு உழைத்ததன் மூலம் பல்வேறு பொறுப்புகளை பெற்று சிறப்பாக செயல்பட்ட செங்கை செல்லப்பன் திடீர் மறைவால் மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.

தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்சி துறையின் தலைவராகவும்,  சென்னை மாநகராட்சி கவுன்சிலராகவும் பொறுப்பு வகித்து மக்கள் பணியாற்றியவர். மக்களுக்கு சேவை புரிந்த அவரின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது மறைவுக்கு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

Related Stories:

More
>