தமிழக அரசுக்கு வேல்முருகன் கோரிக்கை: ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்

சென்னை, செப். 23: தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கை: எம்.ஆர்.பி போட்டித் தேர்வின் மூலம் முறையாகத் தேர்வு எழுதி கடந்த ஆட்சிக் காலத்தில் சுமார் 15 ஆயிரம் செவிலியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் ஒப்பந்த முறையில் ரூ15,000 மாத ஊதியத்தில் பணி செய்து வருகின்றனர். 6 ஆண்டுகள் கடந்தும் இதுவரை சுமார் 3 ஆயிரம் செவிலியர்கள் மட்டுமே பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.

மீதமுள்ள 12,000 செவிலியர்கள் ஒப்பந்த முறையில் பணி செய்துவருகின்றனர். எனவே, ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற திமுகவின் தேர்தல் அறிக்கையை நிறைவேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்  நடவடிக்கை எடுக்க வேண்டும்.அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள் பணியிடங்களை நிரப்பவும் தமிழக அரசு முன்வர வேண்டும்.

Related Stories:

>