அகில இந்திய பந்த் இடதுசாரிகள் ஆதரவு

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட்  முத்தரசன், மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் நடராஜன் ஆகியோர் வெளியிட்ட கூட்டறிக்கை: வேளாண் விரோத சட்டங்களை திரும்பப் பெறக் கோரி ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் வரும் 27ல் அகில இந்திய பந்த் அறிவித்துள்ளது. இந்த போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) ஆகிய இடதுசாரி கட்சிகள் தங்களது முழு ஆதரவினை தெரிவித்துக் கொள்கின்றன.  

இப்போராட்டத்தில் இடதுசாரிகள் தமிழகம் முழுவதும் அதிகமான மக்களை திரட்டி சாலை மறியல், ரயில் மறியல் போராட்டங்களை நடத்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். பந்த் போராட்டத்தை விளக்கி மக்கள் மத்தியில் விரிவான பிரசாரத்தை மேற்கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறோம். இந்த அகில இந்திய பந்த் போராட்டத்தில் தமிழகத்தில் உள்ள விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், தொழிலாளர்கள், வணிகர்கள் உள்ளிட்டு அனைத்து தரப்பட்ட பொதுமக்களும் இதற்கு பேராதரவு அளிக்க வேண்டும்.

Related Stories:

More
>