பெண்ணுக்கு மிரட்டல் பாஜ பிரமுகர் கைது

துரைப்பாக்கம்: பொத்தேரி கிரேட்டர் மான்செஸ்டர் தெருவை சேர்ந்தவர் பெர்னாண்டஸ். இவரது மனைவி லீனா பெர்னாண்டஸ்(55). இவர்களது மருமகன் அமர்பின் ஹக்மெண்ட் பகராய்பா. இவர் வெளிநாட்டில் உள்ளார். இவருக்கு சொந்தமான வீடு திருவான்மியூர் கண்ணப்பா நகர் நந்தினி வில்லா கார்டனில் உள்ளது. பெர்னாண்டஸ், லீனா பெர்னாண்டஸ் ஆகியோர் வீட்டை பராமரித்து வந்தனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு பெர்னாண்டஸ் இறந்தார். இதனையடுத்து, லீனா பெர்னாண்டஸ் இந்த வீட்டை பராமரித்து வருகிறார்.

வீட்டை கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதம் பாஜ காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் சிவ.அரவிந்தனிடம் முன் தொகையாக ரூ2 லட்சம் பெற்றுக்கொண்டு ரூ40 ஆயிரம் மாத வாடகைக்கு லீனா பெர்னாண்டஸ் விட்டுள்ளார். 4 மாதங்கள் மட்டும் வாடகையை சிவ.அரவிந்தன் கொடுத்தார். 11 மாத வாடகை நிலுவையில் இருந்தது. மேலும், சிவ.அரவிந்தன் வீட்டினை ரூ17 லட்சத்துக்கு குத்தகை விட்டிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து, சிவ.அரவிந்தனை செல்போனில் தொடர்பு கொண்டு, லீனா பெர்னாண்டஸ் கேட்டார். அப்போது அவர், அந்த மூதாட்டியை ஆபாச வார்த்தையில் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். புகாரின்பேரில் நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிவ.அரவிந்தனை நேற்று கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories:

More
>