×

நெம்மேலி கடல்நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பராமரிப்பு பணி: திருவான்மியூர், பெருங்குடி பகுதியில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்

சென்னை: நெம்மேலி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் திருவான்மியூர், பெருங்குடி சுற்றுவட்டார பகுதிகளில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நெம்மேலியில் நாளொன்றுக்கு 110 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதனால், திருவான்மியூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி, அடையாறு, வேளச்சேரி, பெசன்ட் நகர், சோழிங்கநல்லூர், ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை போன்ற பகுதிகளுக்கு நாளை காலை 6 மணி முதல் நாளை மறுநாள் காலை 10 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் முன் எச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், அவசர தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக் கொள்ளலாம்.

இதற்காக, பகுதி 9ன் பகுதிப்பொறியாளரை 81449 30909 என்ற எண்ணிலும், பகுதி 13ன் பகுதி பொறியாளரை 81449 30913 என்ற எண்ணிலும், பகுதி 14ன் பகுதி பொறியாளரை 81449 30914 என்ற எண்ணிலும், பகுதி 15ன் பகுதி பொறியாளரை 81449 30915 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : Nemmeli Seawater Treatment Plant ,Thiruvanmiyur ,Perungudi , Trabajos de mantenimiento en la planta de tratamiento de agua de mar de Nemmeli: mañana se suspenderá el suministro de agua potable a Thiruvanmiyur, en la zona de Perungudi
× RELATED சென்னை அடையாறு, பெருங்குடி,...