மாமல்லபுரத்தில் மாணவர்களுக்கு ஸ்கேட்டிங் போட்டி

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஸ்கேட்டிங் போட்டி நடந்தது. மாமல்லபுரம் மீனவர் பகுதி கடற்கரையொட்டி, பள்ளி மாணவர்களுக்கான ஒரு நாள் ஸ்கேட்டிங் போட்டி அங்குள்ள பயிற்சி மைதான ஓடுதளத்தில் நேற்று நடந்தது. மாமல்லபுரம் மீனவர் பகுதியை சேர்ந்த 1 முதல் 10ம் வகுப்பு வரை பள்ளி பயிலும் மாணவ, மாணவிகள், சிறுவர்கள் ஏராளமானோர் இந்த ஸ்கேட்டிங் போட்டியில், ஆர்வமுடன் பங்கேற்று ஸ்கேட்டிங் செய்து அசத்தினர். இதில், 5 முதல் 10 வயதுவரை உள்ள சிறுவர், சிறுமிகள் பயிற்சியின்போது கற்றுக்கொண்ட அனுபவத்தை ஸ்கேட்டிங் போட்டியில் வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினர். மேலும், மாமல்லபுரம் கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏராளமானோர், ஸ்கேட்டிங் போட்டியை கண்டு ரசித்து போட்டியில் பங்கேற்ற பள்ளி சிறுவர்களை பாராட்டினர். இதில், 30க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள், சிறுவர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக, ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Related Stories:

>