பழங்குடியின மக்களுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த வாடாநல்லூர் கிராமத்தில் வட்ட சட்ட பணிகள் குழு மற்றும் ஒருங்கிணைந்த மேம்பாட்டு அறக்கட்டளை சார்பில் பழங்குடியின மக்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. வட்ட சட்ட பணிகள் குழு தலைவரும், உத்திரமேரூர் உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிபதியுமான பிரேம்குமார் கலந்து கொண்டு, பழங்குடியின மக்களுக்கு, பல்வேறு சட்ட ஆலோசனைகளை வழங்கினார். உத்திரமேரூர் அடுத்த நெல்வாய் கிராமத்தை சேர்ந்த 5 பழங்குடியின குடும்பங்களுக்கு பல ஆண்டுகளாக ஜாதி சான்றிதழ் வழங்காமல் அலைக்கழிக்கப்பட்டதாக, இந்த பணி குழுவின் மூலம்  ஏற்கனவே புகார்  அளிக்கப்பட்டு இருந்தது. இதையொட்டி, நீதிமன்றம் சார்பில் வருவாய்த்துறையினருக்கு உத்தரவிட்ட நீதிபதி பிரேம்குமார், சம்பந்தப்பட்ட 5 குடும்பங்களை சேர்ந்த 17 பேருக்கு ஜாதி சான்றிதழை வழங்கினார். ஒருங்கிணைந்த மேம்பாட்டு அறக்கட்டளை நிறுவன நிர்வாக இயக்குனர் பியூஷா, திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சம்பத், தமிழ்ச்செல்வி, வழக்கறிஞர்கள் சண்முகசுந்தரம், கிருஷ்ணன், சந்தானம், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

More
>