யார்க்கர் கிங் நடராஜனுக்கு கொரோனா: குவாரன்டைனில் விஜய் சங்கர்

துபாய்: நடப்பு ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடந்தபோது  கொல்கத்தா, சென்னை, டெல்லி அணியில் உள்ளவர்களில் சிலருக்கு கொரேோன தொற்று ஏற்பட்டதால் போட்டி இடை நிறுத்தப்பட்டது. அதேபோல்  இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது இந்திய பயிற்சியாளர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளானதால் கடைசி டெஸ்ட் கைவிடப்பட்டது. இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரின் எஞ்சிய ஆட்டங்கள்  அமீரகத்தில் தொடங்கி நடந்து வருகின்றன.  டெல்லி கேப்பிடல்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் மோதும் ஆட்டத்துக்கு முன்பாக நடைபெற்ற பரிசோதனையில்,  ஐதராபாத் வீரர்  நடராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதனையடுத்து அவர் உடனடியாக தனிமையில் வைக்கப்பட்டு தீவிர மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார். அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த மற்றொரு தமிழக வீரர் விஜய் சங்கர் உட்பட 6 பேர் குவாரன்டைனில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நடராஜன் விரைவில் குணமடைய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்வாகம் வாழ்த்து தெரிவித்துள்ளது. யார்க்கர் கிங் நடராஜன் மூட்டு அறுவை சிகிச்சை காரணமாக ஓய்வில் இரு்நதார். அதனால் நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் முழுமையாக விளையாடவில்லை. கூடவே இங்கிலாந்து, இலங்கை தொடர்களில் விளையாடும் வாய்ப்பையும் இழந்தார். காயத்தில் இருந்து  மீண்டு ஐதராபாத் அணியுடன் இணைந்த நிலையில், கொரோனாவால் அவர் களமிறங்கும் வாய்ப்பு தடைபட்டுள்ளது.

Related Stories:

More
>