×

மார்ஷ் கோப்பை: மேற்கு ஆஸி. வெற்றி

அடிலெய்டு: ஆஸ்திரேலியாவின் உள்நாட்டு கிரிக்கெட் தொடரான மாா்ஷ் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நேற்று மேற்கு ஆஸ்திரேலியா, தெற்கு ஆஸ்திரேலியா அணிகள் மோதின. டாஸ் வென்ற தெற்கு ஆஸி. முதலில் பந்துவீச... மேற்கு ஆஸி. அணி 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 352 ரன் குவித்தது. தொடக்க வீரர் ஜோஷ் பிலிப் 137 ரன் (116 பந்து, 10 பவுண்டரி, 7 சிக்சர்), கேப்டன் மிட்செல் மார்ஷ் 111 ரன் (124 பந்து, 14 பவுண்டரி, 3 சிக்சர்), ஆஷ்டன் டர்னர் 46 ரன் (28 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசினர்.

தெற்கு ஆஸி. தரப்பில் கேன் ரிச்சர்ட்சன், வெஸ்லி ஏகார் தலா 2 விக்கெட் எடுத்தனர். தொடர்ந்து விளையாடிய  தெற்கு ஆஸி. அணிக்கு, மழை குறுக்கிட்டதால் 43 ஓவரில் 316 ரன் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த அணி 38.3 ஓவரில் எல்லா விக்கெட்டையும் இழந்து 237 ரன் மட்டுமே எடுக்க, மேற்கு ஆஸி. 78 ரன் வித்தியாசத்தில் வென்றது. தொடக்க வீரர் அலெக்ஸ் கேரி 128* ரன்னுடன் (106 பந்து , 15 பவுண்டரி, 1 சிக்சர்) கடைசி வரை களத்தில் இருந்தார். மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர்.  பெஹ்ரன்டார்ப் 4, ஆண்ட்ரூ டை, ஆஷ்டன் ஏகார் தலா 2 விக்கெட் எடுத்தனர். பிலிப் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.


Tags : Marsh Cup ,West Aussie , Marsh Cup: West Aussie. Success
× RELATED 12 ரன் வித்தியாசத்தில் டெல்லியை...