ஆஸ்ட்ரவா ஓபன் கெர்பரை வீழ்த்திய ஜில்

ஆஸ்ட்ரவா: செக் குடியரசில் நடக்கும் ஆஸ்ட்ரவா ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவு  முதல் சுற்றில் முன்னாள் நம்பர் 1 வீராங்கனையான ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் (33 வயது,15வது ரேங்க்), சுவிட்சர்லாந்து வீராங்கனை ஜில் தெய்க்மன் (24 வயது, 42வது ரேங்க்) மோதினர். சமீபத்திய தொடர்களில் முன்னணி வீராங்கனைகளை வீழ்த்தி அதிர்ச்சி அளித்த ஜில் நேற்றும் கெர்பரிடம் வேகம் காட்டினார். அதிரடியாக விளையாடி புள்ளிகளைக் குவித்த அவர் 6-2, 6-3 என்ற நேர் செட்களில் எளிதில் வென்றார். இப்போட்டி 1 மணி 12 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.

இந்த ஆண்டில் ஜில் முதல் 20 இடங்களில் இருக்கும் வீராங்கனைகளில் பலரை மண்ணைக் கவ்வ வைத்துள்ளார். அவர்களில் கெர்பர் 7வது வீராங்கனை. ஏற்கனவே உலகின் நம்பர் 1 வீராங்கனை ஆஷ்லி பார்தி (ஆஸ்திரேலியா), நவோமி ஒசாகா (ஜப்பான்), பெலிண்டா பென்சிக் (சுவிட்சர்லாந்து), கரோலினோ பிளிஸ்கோவா (செக் குடியரசு), எலினா ஸ்விடோலினா (உக்ரைன்), பெட்ரா குவித்தோவா (செக் குடியரசு) என முன்னணி வீராங்கனைகள் இந்தப் பட்டியலில் உள்ளனர். சமீபத்தில் நடந்த சின்சினாட்டி ஓபனில் ஜில் இறுதி ஆட்டம் வரை முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

* காலிறுதியில் சானியா இணை

ஆஸ்ட்ரவா ஓபன் மகளிர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா -  ஷுவாய் சாங் (சீனா) இணை நேற்று எமினா பெக்டஸ் (அமெரிக்கா) - தாரா மூர் (இங்கி.) இணையுடன் மோதியது. 3 செட்களும் டை பிரகே்கர் வரை நீண்ட பரபரப்பான ஆட்டத்தில்  சானியா ஜோடி 6-7 (3-7), 7-5, 10-7 என்ற செட்களில் வென்று காலிறுதிக்கு முன்னேறியது. இப்போட்டி 1 மணி, 43 நிமிடத்துக்கு நீடித்தது.

Related Stories:

More