×

நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 10% ஆக சரியும்: ஆசிய வளர்ச்சி வங்கி கணிப்பு

புதுடெல்லி: இந்திய பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 10 சதவீதமாக சரியும் என, ஆசிய வளர்ச்சி வங்கி தெரிவித்துள்ளது. நடப்பு 2021-22 நிதியாண்டில், பொருளாதார வளர்ச்சி குறியீடான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 11 சதவீதமாக இருக்கும் என ஆசிய வளர்ச்சி வங்கி கடந்த ஏப்ரல் மாதத்தில் கணித்திருந்தது. இந்நிலையில், நேற்று புதிய கணிப்பை வெளியிட்டது. அதில்,  கொரோனா பாதிப்பு காரணமாக, இந்தியாவின் பொருளாதாரம் நடப்பு ஆண்டில் பாதிப்படையும். எனவே, பொருளாதார வளர்ச்சி 10 சதவீதமாக மட்டுமே இருக்கம் என தெரிவித்துள்ளது. ஆசிய பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதத்தில் இருந்து 7.1 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், சீன பொருளாதார வளர்ச்சி ஏற்கெனவே கணித்தபடி 8.1 சதவீதமாக நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது.

Tags : Asian Development Bank , Indian economy to shrink by 10% in current fiscal: Asian Development Bank forecast
× RELATED ரூ.58.33 கோடி மதிப்பில் கடப்பாக்கம் ஏரி புனரமைப்பு