நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டல்; தொழிலதிபர்கள், வியாபாரிகளிடம் உல்லாசமாக இருப்பது போல் நடித்து பணம் பறித்த ‘பியூட்டிசன்’: 4 பேர் கும்பல் சிக்கியது

திருமலை: ஆபாசமாக பேசி வரவழைத்து தொழிலதிபர்கள், வியாபாரிகளை மிரட்டி பணம் பறித்த பியூட்டி பார்லர் பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம் வட்லூரை சேர்ந்தவர் சுஷ்மா (37). பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். இவரது கணவர் நரேந்திரகுமார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். சுஷ்மா கல்லூரியில் படிக்கும்  தனது மகனுடன் வசித்து வருகிறார். இவர் அதிகளவு பணம் சம்பாதிக்க திட்டமிட்டார். இதற்காக வாங்கயுகுடேம் சுப்பிரமணியம் காலனியை சேர்ந்த உமாமஹேஸ்வரன் (30), ஜங்கரெட்டி கூடத்தை சேர்ந்த இளம்பெண் குமாரி(28), சத்ரம்பாடு எம்ஆர்சி காலனியை சேர்ந்த ஷேக்நாகூர் (35) ஆகியோரை தன்னுடன் இணைத்துக்கொண்டார். இவர்கள் 4பேரும் ஒன்று சேர்ந்து கஞ்சா விற்பனை, ரைஸ் புல்லிங், அரிய வகை இரிடியம் இருப்பதாக கூறி வியாபாரிகள், தொழிலதிபர்களுக்கு போன் செய்து தனது மாய வலையில் வீழ்த்தியுள்ளனர்.

மேலும் தொழிலதிபர்களுக்கு வீடியோ காலில் குமாரி மூலம் அழைப்பு விடுப்பாராம். அப்போது அவர்கள் தெரிவிக்கும் இடங்களுக்கு வருபவர்களிடம் உல்லாசமாக இருப்பது போல் நடித்து நிர்வாணப்படுத்தி ரகசியமாக வீடியோ பதிவு செய்வார்களாம். பின்னர் நிர்வாண வீடியோவை வைத்து மிரட்டி பணம் பறித்துள்ளனர்.  இதேபோல் கடந்த 2ம்தேதி ஒரு வியாபாரியிடம் குமாரி மூலமாக பேசி ஏலூரில் உள்ள வீட்டுக்கு வரவழைத்தனர். வீட்டுக்கு வந்த வியாபாரியை மயக்கும் வகையில் ஆசை வார்த்தைகளை பேசியபடியே குமாரி மதுவை குடிக்க வைத்துள்ளார். வியாபாரியின் ஆடைகளை கழற்றி நிர்வாணமாக்கினார். இதனை ரகசியமாக சுஷ்மா உள்பட 3 பேர் வீடியோ பதிவு செய்துள்ளனர்.

பின்னர் சுஷ்மா உள்பட 4 பேரும் நிர்வாண வீடியோவை காண்பித்து இதை வெளியே வரமால் இருக்க ரூ.25 லட்சம் கொடுக்க வேண்டும் என்று மிரட்டினர். ஆனால் அவ்வளவு பணம் இல்லை என்று வியாபாரி கூறியுள்ளார். இதனால் அவரிடம் இருந்த 2 செல்போன்கள், ஒரு  பிரேஸ்லெட், தங்க செயின் மற்றும் 1.50 லட்சம் பணத்தை பறித்துள்ளனர். இருப்பினும், அந்த வியாபாரியிடம்  தொடர்ந்து இந்த கும்பல் வீடியோவை காட்டி பணம் கேட்டுள்ளனர். இதுகுறித்து அந்த வியாபாரி கடந்த 13ம்தேதி ஏலூர் போலீசில் புகார் அளித்தார்.  அதன்பேரில், இன்ஸ்பெக்டர் வரப்பிரசாத் வழக்குப்பதிந்து சுஷ்மா உட்பட 4 பேரை நேற்று முன்தினம் இரவு கைது செய்தார். அவர்களிடமிருந்து 3 சவரன் நகைகள், 8 செல்போன்கள், ரூ.50 லட்சம் ரொக்கம், கார், ரகசிய கேமரா, மெமரி கார்டுகளை பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக சுஷ்மாவிடம் நடத்திய விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது: பேஸ்புக் மூலம் அறிமுகமான குண்டூரை சேர்ந்த  வியாபாரி கவுரிசசி  என்பவருடன் பழகி கள்ளக்காதலில் ஈடுபட்டுள்ளார். சில நாட்களுக்கு பிறகு சுஷ்மா பற்றி தெரிந்த அவர் விலகினார். ஆனால் கவுரிசசியிடம் சுஷ்மா ஆசைவார்த்தை கூறி கடந்த ஜூன் 22ம்தேதி குண்டூர் மாவட்டம், சட்டனப்பள்ளிக்கு வரவழைத்துள்ளார். அப்போது உங்களது வியாபாரம் நன்றாக நடக்க வேண்டி சாய்பாபா கோயிலில் இருந்து விபூதி பிரசாதம் கொண்டு வந்துள்ளேன்.

இதை தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும் எனக்கூறி சயனைடு கலந்து விபூதியை கொடுத்துள்ளார். இதை நம்பிய கவுரிசசி அன்று இரவு விபூதியை தண்ணீரில் கலந்து குடித்துள்ளார். காலையில் உறவினர்கள் பார்த்தபோது கவுரிசசி உயிரிழந்து கிடந்தார். அவரது குடும்பத்தினர் கொரோனாவால் இறந்ததாக நினைத்து இறுதிச்சடங்கு செய்துள்ளனர் என தெரிய வந்துள்ளது. இதையடுத்து தொடர்ந்து  அவர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

More