2020ல் ரத்து செய்யப்பட்ட நிலையில் குளிர்கால கூட்டத் தொடருக்கு ஆயத்தம்: கேபினட் செயலாளர் அவசர கடிதம்

புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வழக்கமாக நவம்பர் கடைசி வாரம் அல்லது டிசம்பர் முதல் வாரத்தில் இருந்து தொடங்கும். ஆனால் கொரோனா தொற்றுநோய் காரணமாக கடந்தாண்டு குளிர்கால அமர்வு எதுவும் நடத்தப்படவில்லை. இந்நிலையில், ஒன்றிய அரசின் கேபினட் செயலாளர் ராஜீவ் கவுபா, கடந்த வாரம் அனைத்து துறை செயலாளர்களுக்கும்  முக்கியமான கடிதம் ஒன்றை கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘வரவிருக்கும் குளிர்கால கூட்டத்தொடரில் (நவம்பர் கடைசி) உத்தேசிக்கப்பட்டுள்ள சட்டவிதிகள் திருத்தம் தொடர்பான அறிக்கைகளை தயார் செய்ய வேண்டும்.

அதற்கான ஆயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தற்போது நிலுவையில் உள்ள சட்டமுன்மொழிவுகளின் நிலை மற்றும் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய புதிய சட்டங்கள் ஆகியவற்றின் நிலை குறித்து அறிக்கை தயார் செய்ய வேண்டும். அடுத்த நாடாளுமன்றக் கூட்டத் தொடருக்கான அலுவல்களை, காலவரையறைக்குள் முடிக்க வேண்டும். அதற்கான தனிப்பட்ட கவனம் செலுத்த வேண்டும். நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகம், சட்ட விவகாரங்கள் துறை, சட்டதுறை மற்றும் பிற ஒருங்கிணைப்பு துறைகளுடன் ஒருங்கிணைப்பு அவசியம்’ என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

More
>