மழைநீர் வடிகால்களில் தூர்வாரும் பணி-திமுக எம்.எல்.ஏக்கள் தொடங்கி வைத்தனர்

ஆண்டிபட்டி/பெரியகுளம் : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் ஆண்டிபட்டியில் நெடுஞ்சாலைத்துறை மூலம் வாய்க்கால் மற்றும் மழைநீர் வடிகால்களில் மாபெரும் தூர்வாரும் பணியை, திமுக எம்.எல்.ஏ மகாராஜன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதன்படி,  ஆண்டிபட்டியில் வைகை அணை சாலை, சக்கம்பட்டி, பாப்பம்மாள்புரம், ஏத்தக்கோவில் சாலை உள்ளிட்ட பல இடங்களில் வரும் 25ம் தேதி வரை ஜேசிபி மூலம் தூர்வாரும் பணி நடைபெற உள்ளது.

நெடுஞ்சாலையோர வாய்க்கால்களில் பல மாதமாக தேங்கும் கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயத்தை தடுக்கும் வகையில் இப்பணி வேகமாக நடைபெறுகிறது. மேலும், சக்கம்பட்டி பகுதி கால்வாயில் பல ஆண்டாக தேங்கிக் கிடக்கும் கழிவுகளை அகற்ற, அதிகாரிகளுக்கு எம்.எல்.ஏ மகாராஜன் உத்தரவிட்டார். இந்நிகழ்வில் நெடுஞ்சாலைத்துறை ஆண்டிபட்டி உட்கோட்ட உதவி கோட்ட பொறியாளர் திருக்குமரன், உதவிபொறியாளர் முத்துராம், சாலை ஆய்வாளர்கள் சிவப்பிரதா, சரஸ்வதி ஆகியோர் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு சென்று போர்க்கால அடிப்படையில் தூர்வாரும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதில், திமுக மாவட்ட துணைச் செயலாளர் ராஜாராம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பெரியகுளம்

பெரியகுளம் நகராட்சியில் உள்ள 30 வார்டுகளில் மழைநீர் வடிகால் செல்லும் வாய்க்கால்களை தூர்வாரும் பணியினை பெரியகுளம் எம்.எல்.ஏ சரவணகுமார் நேற்று துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், திமுக நகர பொறுப்பாளர் முரளி மற்றும் திமுக நிர்வாகிகள் கந்தன், ஆண்டியப்பன், பெரியகுளம் நகராட்சி ஆணையாளர் பாலமுருகன், சுகாதார ஆய்வாளர்கள் அசன் முகமது, அலெக்ஸாண்டர் உட்பட நகராட்சி அலுவலர்கள், திமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதனிடையே பெரியகுளம் 1வது வார்டு பகுதிகளில் தொடர்ந்து பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை ரோபோ இயந்திரம் மூலம் நீக்கும் பணியை மேற்கொண்டனர். மேலும் தொடர்ந்து பொதுமக்களிடம் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் நகராட்சி நிர்வாகத்தினர் மேற்கொண்டனர்.

Related Stories:

More
>