×

உள்ளாட்சி தேர்தலில் வாக்கு எண்ணும் மையங்களை கலெக்டர் சந்திரகலா ஆய்வு

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட ஊரக, உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையங்களை கலெக்டர் சந்திரகலா உள்ளிட்ட அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.
ராமநாதபுரம்-சக்கரக்கோட்டை, திருப்புல்லாணி-கொம்பூதி, ஆர்எஸ் மங்கலம்-ஏ.ஆர்.மங்கலம், திருவாடானை-பழங்குளம், கடலாடி -கரிசல்குளம், முதுகுளத்தூர்- மகிண்டி ஊராட்சி தலைவர்கள், மாவட்ட கவுன்சில் போகலூர் வார்டு மற்றும் 11 ஒன்றியங்களில் 33 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள் காலியாக உள்ளன. இந்த 40 பதவிகளுக்கு அக்.9ல் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் செப்.15ல் தொடங்கியது.

நேற்று வரை 36 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். பதிவாகும் வாக்குகள் அக்.12ல் எண்ணப்படுகிறது. ஊராட்சி தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் வாக்கு எண்ணும் மையமாக ராமநாதபுரம் அண்ணா பல்கலை பொறியியல் கல்லூரி, மாவட்ட கவுன்சில் தேர்தலில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கை மையமாக பரமக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த மையங்களிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகளை கலெக்டர் சந்திரகலா ஆய்வு செய்தார். தேர்தல் பிரிவு அலுவலர்களிடம் ஆலோசனை செய்தார். எஸ்பி கார்த்திக், கூடுதல் ஆட்சியர் பிரவின் குமார், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் கேசவ தாசன், பரமக்குடி கோட்டாட்சியர் முருகன், தாசில்தார் தமிம் ராசா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கபாண்டியன், பாண்டி, ராஜகோபால், அண்ணாதுரை ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Collector ,Chandrakala , Ramanathapuram: Officials including Collector Chandrakala inspected the rural and local election counting centers in Ramanathapuram district.
× RELATED மதுரை மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகள்...