×

பள்ளிக்கல்விக்கான புதிய பாடத்திட்டத்தை வடிவமைக்க கஸ்தூரி ரங்கன் தலைமையில் 12 பேர் கொண்ட குழுவை அமைத்தது ஒன்றிய அரசு!!

டெல்லி : பள்ளிக்கல்விக்கான புதிய பாடத்திட்டத்தை வடிவமைக்க கஸ்தூரி ரங்கன் தலைமையில் ஒன்றிய அரசு குழு அமைத்துள்ளது. புதிய தேசிய கல்வி கொள்கைக்கான வரைவு குழுவின் தலைவராக இருந்தவர் முன்னாள் இஸ்ரோ தலைவரான கஸ்தூரி ரங்கன். தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் புதிய தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மறுப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இதே கஸ்தூரி ரங்கன் தலைமையில் பள்ளிகளுக்கான புதிய பாடத்திட்டங்களை தயாரிக்க 12 பேர் கொண்ட வரைவு குழுவை ஒன்றிய கல்வி அமைச்சகம் அமைத்துள்ளது.

தேசிய கல்வி திட்டமிடல் மற்றும் நிர்வாக நிறுவனத்தின் வேந்தர் மகேஷ் சந்திர பந்த், ஜாமிய மில்லிய பல்கலைகழக துணை வேந்தர் நஜ்மா அக்தர், பஞ்சாப் மத்திய பல்கலைக்கழக வேந்தர் ஜக்பீர் சிங், ஆந்திர பழங்குடியினர் மத்திய பல்கலைக்கழக துணை வேந்தர் டி.வி.கட்டிமணி உள்ளிட்ட 12 பேர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர். குழந்தை பருவக்கல்வி, பள்ளிக்கல்வி, உயர்கல்வி, ஆசிரியர் கல்விக்கான புதிய பாடத்திட்டங்களை உருவாக்கும் நோக்கில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கை பரிந்துரைகளை கருத்தில் கொண்டு இக்குழு பாடத்திட்டத்தை தயாரிக்கும் என்றும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் ஆலோசனைகள் பெறப்படும் என்றும் கூறப்படுகிறது.


Tags : Union Government ,Musk Rangan , கஸ்தூரி ரங்கன்
× RELATED 2ஜி தீர்ப்பில் தெளிவு தேவை என்ற...