2 சிறுவர்களுக்கு வாந்தி, மயக்கம் குளிர்பான கிடங்கில் அதிகாரிகள் சோதனை

புழல்: புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த லஷ்மணன்(6), உமேஷ்வரர் (8) ஆகிய 2 சிறுவர்கள் நேற்று முன்தினம் அங்குள்ள கடையில் குளிர்பானம் வாங்கி குடித்தனர். சிறிது நேரத்தில் அவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர், அவர்களை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்த குளிர்பான கம்பெனிக்கு சொந்தமான கிடங்கு, சோழவரம் அடுத்த அலமாதியில் இருப்பது தெரிந்தது. அங்கு, திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டு, மாதிரிகளை சேகரித்து, விசாரணை மேற்கொண்டனர். பின்னர்,விற்பனைக்கு அனுப்பப்பட்ட குளிர்பானங்கள் திரும்ப பெறவும், இங்கிருந்து தற்காலிகமாக விநியோகத்தை நிறுத்தவும் உத்தர விட்டுள்ளனர்.

Related Stories:

More
>