விவசாயிகள் மாநாட்டில் மயங்கிய மாஜி எம்.பி

ஈரோடு: ஈரோடு பெரியார் மன்றத்தில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி (சம்யுக்த கிசான் மோர்ச்சா-எஸ்கேஎம்) அமைப்பின் மாநில மாநாடு நேற்று நடந்தது. அமைப்பின் நிர்வாகி யான 78 வயது ஹன்னன் முல்லா மாநாட்டு மேடையில் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென மயங்கினார். மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் சகஜ நிலைக்கு திரும்பிய அவர் பேச்சை தொடங்கி சில நிமிடத்தில் உரையை நிறைவு செய்தார். ஹன்னன்முல்லா மேற்கு வங்க மாநிலத்தில் 7 முறை எம்.பி.யாக இருந்தவர்.

Related Stories:

More
>