×

உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறை சார்பில் திருவள்ளூரில் 3 திட்டங்கள் தொடக்க விழா: அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்

திருவள்ளூர்: உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறை சார்பில், சற்றே குறைப்போம், உபரி உணவை வீணாக்காமல் பகிர்வோம் மற்றும் உபயோகித்த எண்ணெயின் மறுபயன்பாட்டு திட்டங்களின் துவக்க விழா திருவள்ளுரில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் தலைமை வகித்தார். கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வரவேற்றார். திருவள்ளூர் எம்பி கே.ஜெயக்குமார், எம்எல்ஏக்கள் வி.ஜி.ராஜேந்திரன், ஆ.கிருஷ்ணசாமி, எஸ்.சுதர்சனம், டி.ஜெ.கோவிந்தராஜன், எஸ்.சந்திரன், க.கணபதி, துரை சந்திரசேகர், திமுக மேற்கு மாவட்ட பொறுப்பாளர் திருத்தணி எம்.பூபதி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கேவிஜி.உமா மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உபரி உணவை வீணாக்காமல் பகிர்வு செய்யும் 3 வாகனங்களையும், உபயோகித்த சமையல் எண்ணெயின் மறுபயன்பாட்டு திட்ட வாகனத்தையும் கொடியசைத்து துவக்கி வைத்தார். உணவு பாதுகாப்பு காட்சி பலகைகளை 10 நிறுவனங்களுக்கு வழங்கி, சற்றே குறைப்போம் திட்ட விளம்பர பலகையை திறந்து வைத்து, உபயோகித்த சமையல் எண்ணெயின் மறுபயன்பாட்டு திட்ட 13 பயனீட்டாளர்களுக்கு காசோலைகள் மற்றும் சான்றிதழ்கைளை வழங்கி, சரிவிகித உணவு திருவள்ளுர் என்ற விழிப்புணர்வு குறும்படத்தை வெளியிட்டார்.

அப்போது அவர் கூறியதாவது:தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அமைப்புகள், திருமண மண்டபங்கள், விழாக்கள், பெரிய மாநாடுகள் போன்ற பல்வேறு நிகழ்வுகளில் சமைத்து கைபடாமல் இருக்கிற உபரி உணவை பசித்தவர்களுக்கு கொண்டு வந்து சேர்க்கிறார்கள். அவர்கள் சார்பாக, உபரி உணவுகளை கொண்டு சேர்க்க முடியாத நிலை உள்ளது. எனவே, அரசு முன்வந்து தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து கிடைக்கும் உபரி உணவுகளை பெற்று கைபடாமல் பாத்திரங்களில் பசித்தவர்கள் எங்கெல்லாம் உள்ளார்கள் என அடையாளப்படுத்திய பகுதிகளுக்கு சென்று உணவுகளை வழங்குவார்கள்.

மாவட்டத்திலும் செயல்படுத்துவதற்கு முன்னோடி திட்டமாக தொடங்கி வைக்கப்பட்டது,என்றார். இதில் மக்கள் நல்வாழ்வு துறை, முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை ஆணையர் பி.செந்தில்குமார், கூடுதல் ஆணையர் கே.சி.சேரன், தடுப்பூசி பணிகள் இணை இயக்குனர் வினய் குமார், பூச்சியியல் வல்லுநர் இணை இயக்குனர் கிருஷ்ணராஜ், சுகாதார பணிகள் துணை இயக்குனர் கே.ஆர்.ஜவஹர்லால், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் சுபாஷ் சந்திரபோஸ் கலந்துகொண்டனர்.

Tags : Tiruvallur ,Department of Food Safety and Drug Administration ,Minister ,Ma Subramaniam , Inauguration Ceremony of 3 Projects in Tiruvallur on behalf of the Department of Food Safety and Drug Administration: Minister Ma Subramaniam
× RELATED திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற...