திருவள்ளூர் நகர காங். ஆலோசனை கூட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் நகர காங்கிரஸ் ஆலோசனை கூட்டம் நடந்தது. நகர தலைவர் வி.இ.ஜான் தலைமை வகித்தார். பொறுப்பாளர் மூர்த்தி, மாயாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட துணை தலைவர்கள் டி.வடிவேல், டி.எஸ்.இளங்கோவன், ஆல்பர்ட் இன்பராஜ், மாநில செயலாளர் ஒய்.அஸ்வின்குமார், ஓபிசி பிரிவு மாநில செயலாளர் ஜே.கே.வெங்கடேஷ், வட்டார தலைவர் டில்லிபாபு ஆகியோர் பேசினர். புதிய பொறுப்பாளர்களின் பட்டியலை நகர தலைவர் வி.இ.ஜான் வெளியிட்டார். அதில் நகர துணை தலைவர்களாக மனோகரன், மோகன்ராஜ், ரவிச்சந்திரன், ஸ்டாலின், வசந்தகுமார், நகர பொது செயலாளர்களாக வேலு, தயாளன், மணிகண்டன், தமிழரசன், புண்ணியகோட்டி, நிர்மலா, அப்துல்ரசாக், நித்யானந்தன், நகர செயலாளர்களாக மாசிலாமணி, ராஜன், வேலு, நசீர்கான், வீரராகவன், ஏழுமலை, கலீல் ரகுமான், தமிழ்ச்செல்வி, நகர கொள்கை பரப்பு செயலாளராக பாடலீஸ்வரர் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.

Related Stories:

More
>