நோயால் அவதிப்படுகிறேன்: நடிகை தமன்னா உருக்கம்

சென்னை: ஒருவித நோயால் உடல் நலமின்றி அவதிப்படுகிறேன் என தமன்னா கூறியுள்ளார். 31 வயதாகும் தமன்னாவுக்கு சில மாதங்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் தாக்கியது. இதையடுத்து, அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஒரு வார சிகிச்சைக்கு பிறகு குணமாகி வீடு திரும்பினார். தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் அவர் கூறும்போது, ‘ஒருவித நோயால் அவதிப்படுகிறேன். இதனால் எனது உடல்நிலையும் பாதிக்கப்பட்டுள்ளது’ என்றார். தமன்னாவுக்கு என்ன நோய் என்பது தெரியவில்லை. அவரும் அது பற்றி விரிவாக கூறவில்லை. இந்த வியாதிக்காக அவர் சிகிச்சை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

Related Stories:

More
>