வெளிநாட்டு பிரதிநிதிகளிடம் இருந்து ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பரிசு பொருட்களை பெறலாம்: 50 ஆண்டு சட்டத்தை திருத்தியது ஒன்றிய அரசு

புதுடெல்லி: ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் அதிகாரிகள் வெளிநாட்டு பிரமுகர்களிடம் இருந்து பெற்ற பரிசு பொருட்களை தாங்களே வைத்துக் கொள்வதற்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. வழக்கமாக தெரிந்த அல்லது தெரியாத வெளிநாட்டு பிரமுகர்களிடம் இருந்து ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் பரிசு பொருட்கள், வெளியுறவு துறை அமைச்சகத்தின் பிரிவில் ஒப்படைக்கப்பட வேண்டும். இந்திய சேவை நடத்தை விதிகள் 1968ன் கீழ், பரிசு பொருட்களின் விலை ரூ.5 ஆயிரத்துக்கும் அதிகமாக இருக்கும்போது, எந்த ஒரு இந்திய நிர்வாக சேவை அதிகாரிகளும் அரசின் அனுமதியின்றி அதனை ஏற்க முடியாது.

மேலும், நெருங்கிய உறவினர்கள் அல்லது அலுவலக சம்பந்தம் இல்லாத தனிப்பட்ட நண்பர்களிடம் இருந்து பரிசு பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். ஆனால், விதிகளின்படி பரிசு பொருட்களின் மதிப்பு ரூ.25 ஆயிரத்து அதிகமாக இருந்தால் அது குறித்து அரசிடம் அறிக்கை சமர்பிக்க  வேண்டும். இந்நிலையில், 50 ஆண்டுகளாக இருந்த இந்த விதிமுறைகளில் ஒன்றிய அரசு தற்போது திருத்தம் செய்துள்ளது. இதன்படி, ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் அதிகாரிகள் இந்திய பிரதிநிதிகள் குழுவில் இருந்தாலும் அல்லது இல்லை என்றாலும் வெளிநாட்டு பிரமுகர்களிடம் இருந்து பரிசுப் பொருட்களை பெறவும், அவற்றை தாங்களே வைத்துக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>