வேலுமணி வழக்கில் சோதனைக்குள்ளான வருவாய்த்துறை அதிகாரி மதுராந்தகி ஸ்ரீபெரும்புதூருக்கு அதிரடி மாற்றம்: 25 மாவட்ட வருவாய் அலுவலர்கள் பணியிட மாற்றம்

சென்னை: வேலுமணி வழக்கில் சிக்கி சோதனைக்குள்ளான வருவாய்த்துறை அதிகாரி மதுராந்தகி, திருப்பூரில் இருந்து ஸ்ரீபெரும்புதூருக்கு அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார். அவருடன் மேலும், 25 மாவட்ட வருவாய் அலுவலர்களை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு பிறப்பித்துள்ள உத்தரவு:  தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா கோவை மாநகராட்சி துணை ஆணையராகவும், கோவை மாநகராட்சி துணை ஆணையர் விமல்ராஜ் நெல்லை சூரிய மின்சக்தி கலன் அமைப்பு மாவட்ட வருவாய் அலுவலராகவும், கோவை மாவட்ட வருவாய் அலுவலர் (முத்திரைத்தாள்) சென்னை தமிழ்நாடு சிமெண்ட் நிறுவன மாவட்ட வருவாய் அலுவலராகவும், சென்னை தமிழ்நாடு சிமெண்ட் நிறுவன மாவட்ட வருவாய் அலுவலர் மோகன்ராஜ் சென்னை தமிழ்நாடு மூலிகை பண்ணைகள் மற்றும் மூலிகை மருத்துவ கழக மாவட்ட வருவாய் அலுவலராகவும், நாகை சென்னை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழகம் மாவட்ட வருவாய் அலுவலர் (நிர்வாகம்).

 பொன்னம்மாள் சென்னை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மாவட்ட வருவாய் அலுவலராகவும் (வர்த்தகம்), சேத்தியாதோப்பு எம்.ஆர்.கூட்டுறவு சர்க்கரை ஆலை மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன் சென்னை எரிசக்தி மாவட்ட வருவாய் அலுவலராகவும், ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் மாவட்ட வருவாய் அலுவலர் (நிலஎடுப்பு) ராஜேஸ்வரி கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலராகவும், தேனி தேசிய நெடுஞ்சாலை தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) தியாகராஜன் தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் மாவட்ட வருவாய் அலுவலராகவும், கோவை தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு)  சாந்தி மதுரை இந்து சமய அறநிலையங்கள் துறை மாவட்ட வருவாய் அலுவலராகவும், திருப்பூர் தேசிய நெடுஞ்சாலை தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) மதுராந்தகி பெரும்புதூர் சிப்காட் தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு), சென்னை மாநகராட்சி மாவட்ட வருவாய் அலுவலர் (நிலம் மற்றும் எஸ்டேட்) ராஜேந்திரன் சென்னை தமிழ்நாடு வர்த்தக மேம்பாட்டு நிறுவனம் மாவட்ட வருவாய் அலுவலராகவும்.

 சென்னை சாதிகள், சமூகங்கள், பழங்குடியினர் பற்றி அளவிடக்கூடிய தரவுகள் சேகரிப்பதற்கான ஆணையம் மாவட்ட வருவாய் அலுவலர் விமலா சென்னை நகர போக்குவரத்து நெரிசல் நீக்கல் திட்டம் தனி மாவட்ட வருவாய் அலுவலர் என மொத்தம் 25 பேர் பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனர். அதில் திருப்பூர் தேசிய நெடுஞ்சாலை தனி மாவட்ட வருவாய் அலுவலர் மதுராந்தகி, வேலுமணி, உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது, கோவை மாநகராட்சி துணை ஆணையராக பணியாற்றினார். இதனால் கோவையில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையைத் தொடர்ந்து, மதுராந்தகி, தற்போது பெரும்புதூர் சிப்காட் தனி மாவட்ட வருவாய் அலுவலராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: