இஸ்லாமியர்கள் பற்றி அநாகரீக பேச்சு சிவகுமாரை குண்டாசில் கைது செய்ய வேண்டும்: கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்

சென்னை:  தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: யோகக் குடில் சிவயோகி சிவகுமார் என்ற நபர் பொது வெளியிலும், வலைதள பதிவுகளிலும் இழிவான ஆபாச வார்த்தைகளை பேசி வன்மையான கருத்துகளை பகிர்ந்துள்ளார்.

மேலும், சிவகுமார் பின்னணி மற்றும் தொடர்புகள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும். மதநல்லிணக்கத்திற்கு உலை வைக்கின்ற வகையில் கருத்துகளை வெளியிடுகிற சிவகுமார் போன்ற சமூக விரோதிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்து கடுமையான நடவடிக்கைகளை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

Related Stories:

More