விநாயகர் ஊர்வலத்தில் போலீஸ் துப்பாக்கிச்சூடு

திருமலை: ஆந்திர மாநிலம்,  குண்டூர் மாவட்டத்தில் உள்ள பெத்தநந்திபாடு அடுத்த கொப்பருவில் நேற்று முன்தினம் விநாயகர் விஜர்சன ஊர்வலம் நடந்தது. அப்போது,   ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினருக்கும், தெலுங்கு தேசம் கட்சியினருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. ஊர்வலம் தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் ஜில்லா பரிஷத் உறுப்பினர் சாரதாவின் வீட்டின் அருகே வந்தபோது ஊர்வலத்தில் இருந்த ஆளும் கட்சியினர் சாரதா  வீட்டில் நுழைந்து  6 பைக்குகளுக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளனர்.

மேலும், தடுக்க வந்த போலீசார் மீதும் கற்கள் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதையடுத்து, போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தி கலவரக்காரர்களை கலைத்தனர். போலீசார்  தாக்குதல் நடத்திய 15 பேரை கைது செய்தனர்.

Related Stories:

More