இந்தியாவின் எல்லை அருகே சீனா 10 விமானப்படை தளம்; ராகுல் காந்தி எச்சரிக்கை

புதுடெல்லி: ‘இந்திய எல்லைகளில் புதிய போர் அபாய எச்சரிக்கை ஏற்பட்டுள்ளது. இதை புறக்கணிப்பது பாதுகாப்பானதல்ல,’ என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எச்சரித்துள்ளார். இந்திய-சீன எல்லையில் கடந்தாண்டு பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் லடாக், உத்தரகாண்ட், அருணாச்சல பிரதேசம் ஆகிய எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே சீனா 10 ராணுவ விமான தளங்களை உருவாக்கியுள்ளது.

மேலும், அதன் உட்கட்டமைப்பையும் இந்திய எல்லைக்கு நெருக்கமாக விரிவுபடுத்தியுள்ளது என்ற பத்திரிகை செய்தியை மேற்கோள்காட்டி, ராகுல் நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘இந்திய எல்லைகளில் புதிய போர் அபாய சவாலை நாம் எதிர்நோக்கியுள்ளோம். இதை புறக்கணிப்பது பாதுகாப்பானது அல்ல’ என்று கூறியுள்ளார்.

Related Stories:

More