×

நீட் தேர்வில் இருந்து விதி விலக்கு பெற ஒன்றிய அரசை வலியுறுத்தி மக்கள் எழுச்சி மாநாடு, போராட்டம் நடத்த வேண்டும்: கி.வீரமணி தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் நேற்று அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது. இதில் திமுக துணை பொது செயலாளர் ஆ.ராசா, காங்கிரஸ் துணை தலைவர்  ஆ.கோபண்ணா, விசிக தலைவர் திருமாவளவன், மதிமுக அமைப்பு  செயலாளர் ஆ.வந்தியத்தேவன், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்,  இந்திய கம்யூனிஸ்ட் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர்  ஜி.ஆர்.ரவீந்திரநாத்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலப் பொதுச்செயலாளர்  கே.ஏ.எம்.முகம்மது அபுபக்கர், மனித நேய மக்கள் கட்சி தலைவர்  எம்.எச்.ஜவாஹிருல்லா, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொது செயலாளர்  சுப.வீரபாண்டியன்,  பொதுப் பள்ளிக்கான மாநில மேடை பொதுச்செயலாளர் பிரின்ஸ்  கஜேந்திரபாபு, அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு  கோ.கருணாநிதி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி துணைப் பொதுச்செயலாளர் சத்ரியன்  வேணுகோபால், திராவிடர் கழக துணை தலைவர் கலி.பூங்குன்றன், பொருளாளர்  வீ.குமரேசன், பொது செயலாளர் வீ.அன்புராஜ், விசிக வன்னிஅரசு, அ.பாலசிங்கம்.  ஆறுமுக நயினார், யாக்கூப், சிங்கராயர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், நீட் தேர்வுக்கு எதிராக வெகுமக்களின் எழுச்சி கிளர்ந்துள்ளது. அதனை ஒருமுகப்படுத்தும் வகையிலும், மேலும் அதனை கூர்மைப்படுத்தும் வகையிலும் சமூகநீதிக்கான எழுச்சி மாநாடுகள் சென்னை, மதுரை, கோவை போன்ற மாநகரங்களில் நடத்தப்படும். மாணவர்கள், பெற்றோர், கல்வியாளர்கள் மற்றும் அனைத்துத் தரப்பினரும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும். தேவையான வகைகளில் மக்கள் போராட்டங்களையும் முன்னெடுப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Tags : People's ,Union government ,K. Veeramani , People's uprising conference urges govt to exempt from NEET exam: Resolution at all party meeting chaired by K. Veeramani
× RELATED பிஎச்.டி. படிப்புக்கும் தேசிய நுழைவுத்...